செய்வினையையும்.. எதிரிகளின் தொல்லை நீக்கும் காளி அம்மன் ஸ்லோகம்..!


இந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.

காளி என்ற பெயரை சொன்னாலே, அவளின் உக்கிரமான உருவமும், ஒருவித நடுக்கமும் தான் நம் மனதில் தோன்றும். ஆனால் காளி என்பவள் அம்பிகையின் தோற்றமாகத் தான் திகழ்கின்றாள். துர் சக்திகளை அழிக்க அம்பிகை எடுத்த அவதாரம் தான் காளி. இதனால் காளியை பார்த்து பயப்பட எந்த அவசியமும் இல்லை. காளியின் திருவுருவப் படத்தை நம் வீட்டில் வைத்து வழிபட வில்லை என்றாலும் சரி, அவளை மனதார நினைத்து காளியின் ஸ்லோகத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் சில பயன்களை அடையலாம். காளி அம்மன் ஸ்லோகம் உங்களுக்காக இதோ.

அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி

மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
நிரந்தரி நீலி கால பைரவி
திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
சரணம் சரணம் சரணம் தேவி
எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்.

காரணமும் தனுவு நினைக்கெனத் தந்தேன்
காளி நீ காத்தருள் செய்யே!

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேசயினை அஞ்சேன்;
இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
தாயெனைக் காத்தருள் கடனே!
தவத்தினை எளிதாப் புரிந்தனள்;
யோகத் தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

சிவத்தினை எளிதாப் புரிந்தனள்;
மூட்ச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

பாவத்தினை வெறுப்ப அருளினாள்;
நாளும் பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள்;
அறிவென விளைந்தாள்;
அருந்தவமா வாழ்கவிங்

கவளே! ஓம்!!! ஓம்!!! ஓம்!!!

இந்த மந்திரத்தினை நாம் தினந்தோறும் உச்சரித்து வந்தால் நம் மனதில் உள்ள தேவையற்ற பயங்களும், நம் எதிரிகளின் தொல்லைகளும், ஏதேனும் செய்வினைகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்களும் நம்மிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!