டக்ளஸ் தேவானந்தா – ஆறுமுகம் தொண்டமானுக்கும் முக்கிய பதவி கொடுத்த கோத்தபாய..!


இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றது. தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர்.

இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அதிபர் கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 15 அமைச்சர்கள் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நிதி, பாதுகாப்பு, மதவிவகாரங்கள் துறைகள் மகிந்த ராஜபக்சே வசம் இருக்கும். நீதித்துறை அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளித் தமிழரான ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக ஈழத் தமிழரான டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார்.

மாகாண சபைகளுக்கான அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன், உணவு பாதுகாப்புத் துறை அமைச்சராக மகிந்தவின் சகோதரர் சாமல் பராஜபக்ச , தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச உள்ளிட்டோர் பதவியேற்றனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!