“போரை நிறுத்துங்கள்” என்ற பதாகையுடன் நுழைந்த பெண் ஊழியர் சிறையில் அடைப்பு!

இராணுவத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காக மெரினா ஓவ்சியனிகோவாவை ரஷிய போலீசார் கைது செய்தனர்.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது ” போரை நிறுத்துங்கள் என்ற முழக்கத்தோடு கையில் பதாகையை ஏந்தி கொண்டு அங்கே வேலை செய்யும் மற்றொரு பெண் ஊழியர் (மெரினா ஓவ்சியனிகோவா) உள்ளே நுழைந்தார்.

ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .அதில்,”போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் ” என எழுதப்பட்டு இருந்தது.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் இராணுவத்தை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதாகவும் ரஷ்ய இராணுவத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் மெரினா ஓவ்சியனிகோவாவை ரஷிய போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 10 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!