தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்யும் அரசு ஊழியர்கள்.. அதிர வைக்கும் காரணம்!


தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்யும் அரசு ஊழியர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில்தான் இந்த விநோத சம்பவம் நடைபெறுகிறது. இங்குள்ள மின்சாரத் துறை அலுவலகக் கட்டிடத்தின் மேற்கூரை பாழடைந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி வேலை செய்கிறார்கள்.

உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கும் ஊழியர்கள், ஆவணங்களை பாதுகாக்கக்கூட அலமாரி வசதி இல்லை என்றும், அட்டைப்பெட்டியில்தான் அவற்றை சேகரித்து வைக்க நேரிடுகிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தால் ஹெல்மெட்டை கடந்து அடிபடும் என்பது கூட தெரியாமல் எதோ ஒரு தற்காப்புக்கு ஹெல்மெட் போட்டு பணிபுரியும் இந்த அரசு ஊழியர்கள் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!