ரோபோ சங்கரின் மகளிடம் மன்னிப்பு கேட்ட விஜய்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்துஜா, அமிர்தா, வர்ஷா உள்ளிட்ட பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா இந்தப் படத்தில் நடித்திருந்தார். உடல் பருமனாக இருக்கும் அவரை ஒரு காட்சியில் நடிகர் விஜய் குண்டம்மா என கூறுவார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோற்றத்தை வைத்து கிண்டல் செய்வதாக விஜய்யை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதுபற்றி இந்திரஜா கூறும் போது, ‘படத்தின் காட்சிக்கு தேவைப்பட்டதால் தான் அவர் என்னை குண்டம்மா என அழைத்தார். விஜய் அப்படி கூறுவதற்கு முதலில் தயங்கினார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாக தான் நடித்தேன். அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று அழைத்ததற்காக மன்னிப்பு கேட்டார் என கூறியுள்ளார்.-Source: Kumudam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!