கண்களுக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு… பார்வையை இழந்த இளைஞன்!


படுத்துக் கொண்டே நீண்ட நேரம் செல்ஃபோன் பார்க்கும் வழக்கம் கொண்டவரா நீங்கள், இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

நவீன தொழில்நுட்ப உலகில், செல்ஃபோன் மனித வாழ்விற்கு மிக அத்தியாவசியமாகவும், மிக இடையூறாகவும் மாறிவிட்டது. சாப்பிட போனாலும், கழிவறை போனாலும், உறங்கப் போனாலும் செல்ஃபோனை எல்லோரும் கையில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு, படுக்கையில் இருந்தபடி நீண்ட நேரம் செல்ஃபோன் பார்த்ததால் ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆம், அந்நாட்டின் ஷான்ஷி மாகாணத்தைச் சேர்ந்த அந்த நபர், இரவு படுக்கையில் விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் செல்ஃபோனில் நீண்ட நேரம் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கண்களின் இயக்கம் முடங்கிவிட்டதாம். அதாவது, அவர் நீண்ட நேரம் செல்ஃபோன் பார்த்ததால் அவரது கண்ணின் ரெட்டினா பகுதிக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் நரம்புகள் அப்படியே அடைத்துக் கொண்டுவிட்டன. இதையடுத்து, தற்காலிகமாக பார்வை தெரியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, அவருக்கு தற்போது வலது கண்ணில் சரியான பார்வை இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் அவரால் கண்களை இயக்கி பார்க்க முடியாது. தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில், அவரால் முழு பார்வை பெற முடியும் என்றாலும், வலது கண்ணின் செயல்பாடு பற்றி உறுதி அளிக்க முடியாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த நபர், வலது கண்ணின் ஓரமாக ஃபோனை வைத்தபடி இருட்டில் பார்த்து வந்ததே இதற்கு காரணமாகும்.

செல்ஃபோனையே நீண்ட நேரம் உற்று பார்ப்பதால், கண்களின் நரம்பு, இயக்கம் பாதிக்கப்பட்டு, நமது பார்வை 360 டிகிரி கோணத்தில் இருந்து படிப்படியாகக் குறைந்து, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைபடும் நிலை ஏற்படுகிறது. இதனால், நம்மால் எளிதில் தலையை சுற்றி பார்க்க முடியாமல் போய்விடும். நம் முகத்திற்கு நேராக உள்ள பொருட்களை மட்டுமே பார்க்கும் நிலை உருவாகும். பிறகு, இதுவும் படிப்படியாக மறைந்து, கண்களில் முழுப் பார்வை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, செல்ஃபோனை நீண்ட நேரம் உற்று பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!