2வது திருமணம் செய்த தாய்..! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த மகன்! பின்ணனியில் பகீர் சம்பவம்!


கேரள பெண் டில்லியில் தற்கொலை செய்து கொண்டது விசுவரூபம் எடுத்துள்ளது.”அம்மா.. நீ பேசாம போய் தற்கொலை பண்ணிக்கோ” என்று மகன் சொல்லவும் திடுக்கிட்டுள்ளார் அந்த தாய். இறுதியில் தாய் தூக்கில் தொங்க.. மகன் ரயில்வே டிராக்கில் விழுந்து சாக.. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி காலேஜில் விரிவுரையாளராக வேலைபார்த்து வந்தவர் ஆலன் ஸ்டான்லி. 27 வயது… டெல்லி பித்தம்புரா பகுதியில் ஒரு வீடு எடுத்து, தன் அம்மா லிஸியுடன் வசித்து வந்தார். லிஸிக்கு வயசு 55 ஆகிறது!

இந்நிலையில் போன சனிக்கிழமை ஆலன், திடீரென சாரா ரோஹிலா ரயில்வே நிலைய டிராக்கில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதனால், போலீசார் உடனே வீட்டுக்கு விரைந்து சென்றார்கள். அப்போது, லிஸியும் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார்.

அடுத்தடுத்து தாயும் மகனும் ஏன் இறந்தார்கள் என்பது போலீசாருக்கு இன்னும் குழப்பத்தை தந்தது. அதனால் இது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கினார்கள். அப்போதுதான், ஆலனே தன் அம்மாவையும் கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

லிஸி கேரளாவை சேர்ந்தவர். இடுக்கி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் 2014-ல் இறந்துவிட்டார். அதனால் ஒரே மகன் ஆலனை நன்றாக படிக்க வைத்தார். ஒரு டிகிரியை முடிக்க வைத்தார். இதற்கு பிறகுதான், டெல்லியில் கடந்த 5 வருஷமாக தங்கி ஆலன் பிஹெச்டி படித்திருக்கிறார். படித்ததுமே போன வருஷம் டெல்லி காலேஜில் வேலை கிடைத்துவிட்டது.

ஹைதராபாத் ஹாஸ்டல், டெல்லி ஹாஸ்டல் என ஆலன் மாறி மாறி பல்வேறு ஊர்களுக்குப் படிக்கப் போனதால் தனது தாயாரை கட்டாயப்படுத்தி, வலியுறுத்தி இன்னொரு திருமணம் செய்து வைத்தார் ஆலன். லிஸியின் 2வது கணவர் பெயர் ஜான் வில்சன். இந்த வில்சனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி பிள்ளைகள், சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் வில்சனும் 2 வருஷத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

இந்த தற்கொலைக்கு காரணம் சொத்து பிரச்சனைதான் என்று கூறி வில்சனின் முதல் மனைவி லிஸி மீதும் பிள்ளைகள் மீதும் கேஸ் தந்துள்ளார். இந்த கேஸை எப்படியாவது டிஸ்மிஸ் செய்து விடுங்கள் என்று ஆலன் கோர்ட் வரை சென்று மன்றாடி கேட்டும், ஆலன் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வில்சனின் மரணம் சந்தேகத்துக்குரிய மரணமாக பதிவு செய்யப்பட்டது. விசாரணையும் நடந்து வந்தது.. இதில் பெயில் வாங்கிக் கொண்டுதான், 2 மாசத்துக்கு முன்பு தாயை டெல்லிக்கு வந்து ஒரு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார் ஆலன்.

இந்த சமயத்தில்தான் கூடத்தாயில் கொடூர கொலைகள் குறித்த செய்திகள் வெளியாகின. கொலைகாரப் பெண் ஜோலியுடன் ஒப்பிட்டு ஊடகம் ஒன்றில் லிஸியைப் பற்றி எழுதியுள்ளனர். இது லிஸி, ஆலனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதன் காரணமாக இருவருமே மன அழுத்தத்தில் இருந்துள்ளனர்.

“எனக்கு வாழவே பிடிக்கல.. சாக போறேன்” என்று விரக்தியாக நண்பர்களிடம் சொல்லி வந்தாராம் ஆலன். இந்த நிலையில்தான் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆலன், தனது தாயாரைக் கொல்லவில்லை என்று தெரிகிறது. லிஸி தற்கொலை செய்த இடத்தில் ஒரு லெட்டர் கிடைத்துள்ளது. அந்த லெட்டர் மலையாளத்தில் உள்ளது.

அதில், “என் கணவர் ஜானின் உயிரிழப்புக்கு நான் காரணம் இல்லை. ஆனால் அவர் தற்கொலையால் சொந்தங்கள் எங்களை ரொம்பவும் காயப்படுத்திவிட்டனர். பொய் வழக்கு போட்டு, கஷ்டப்படுத்திவிட்டனர். நாங்கள் மட்டுமல்ல.. எங்களை தவிர மொத்தம் 12 பேர் ஜானின் உயிரிழப்புக்குக் காரணம். இதில் பத்திரிகையாளர்களுக்கும் தொடர்பு உண்டு” என்று எழுதப்பட்டிருந்தது. லிஸி அவரது மகன் தற்கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!