காதலனால் காலை இழந்த இளம் பெண்… பின்னணியில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!


தனது காதலனுடன் ஆசையாக பாரிஸ் சென்ற பெண் அங்கு திசுக்களை உண்ணும் (necrotizing fasciitis) நோயால் பாதிக்கப்பட்டதால் தனது ஒரு காலினை இழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Sydney Shipley (21) என்பவருக்கு பாரிஸ் என்றால் கொள்ளை பிரியம். அங்கு தனது காதலனுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது.

அந்த ஆசை நிறைவேறும் விதமாக கடந்த ஆகஸ்ட் தாம் தனது காதலனுடன் பாரிஸ் சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அங்கு அப்போது அதிகமான வெப்பம் நிலவியதன் காரணமாக விஷப்பூச்சி ஒன்றின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்.

பாரிஸ் சுற்றுலாவை முடித்து அமெரிக்கா திரும்பிய இரண்டு நாட்களில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இவரது வலது கால் மட்டும் வீங்க ஆரம்பித்துள்ளது.


மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்தபோது, இவரது தொடையில் உள்ள திசுக்களில் பாதி விஷப்பூச்சியால் சாப்பிடப்பட்டிருந்தது.

அதாவது, விஷப்பூச்சி கடித்ததில், இவரது உடல்களில் உள்ள திசுக்களை அது சாப்பிட்டுள்ளது, ஒரு இடம் மட்டுமின்றி தொடையில் உள்ள பிற இடங்களிலும் இது பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் இவரது காலினை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில், இவரது கால் நீக்கப்பட்டது, இதுகுறித்து Sydney கூறியதாவது, பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்குமோ என்ற அச்சத்தில் தான் அங்கு சென்றேன், ஆனால் இப்படி நோய்த்தொற்றால் எனது காலினை இழப்பேன் என நான் நினைக்கவில்லை.

தற்போது, உயிருடன் இருக்கிறேன் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!