வீட்டிற்கு அழைத்து சிவகார்த்திகேயனுக்கு விருந்து கொடுத்த நாகார்ஜுனா மகன்!


சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் வந்தன. இதில் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. நம்ம வீட்டு பிள்ளை நல்ல வசூல் பார்த்தது.

ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதில் கல்யாணி கதாநாயகியாக வருகிறார். அர்ஜுன், இவானா ஆகியோரும் உள்ளனர். சூப்பர் ஹீரோ கதையாக தயாராகிறது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். டிசம்பர் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஐதராபாத்தில் ஹீரோ படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயனை பிரபல நடிகர் நாகார்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகில் தனது வீட்டுக்கு அழைத்தார்.


அதை ஏற்று அங்கு சென்ற சிவகார்த்திகேயனுக்கு அகில் விருந்து கொடுத்தார். பின்னர் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா குறித்து நீண்ட நேரம் பேசினார்கள். சிவகார்த்திகேயனை சந்தித்த புகைப்படத்தை அகில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹீரோ பட குழுவினருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் படங்களும் ஆந்திரா, தெலுங்கானாவில் திரையிடப்படுகின்றன. இதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படம் வசூல் குவித்தது. இந்த படத்தை தெலுங்கிலும் கவுசல்யா கிரிஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இதில் கவரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!