ஒட்டிக் கொண்ட உயிர்கொல்லி நோய்… பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்!


நடிகைகளுடன் கும்மாளமிட்ட முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதன்பிறகு உடல் மெலிந்து, பற்கள் கொட்டி வந்த நிலையில், செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்து கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர் திருவாரூர் முருகன். ஏற்கனவே சுரேஷ், கனவள்ளி, மணிகண்டன் உள்ளிட்டோர் கைதான நிலையில், பெங்களூர் கோர்ட்டில் முருகன் சரணடைந்தார்.

இப்போது தமிழக போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள முருகனிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக் தகவல்கள் தினந்தோறும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அதன்படி, கொள்ளை அடித்து முடிந்ததும் இவர்கள் போட்ட பிளான்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் சுரேஷ் என்பவர் முருகனுக்கு உறவுக்காரன்.. கணேசன் என்பவர் நெருங்கிய நண்பன்.. மதுரை பள்ளப்பட்டியை சேர்ந்தவராம்.

ஜெயில் மேட்.. அதாவது சேலம் ஜெயிலுக்குள் ஒருத்தருக்கொருத்தர் நண்பர்களாகிவிட்டனர். கைதி என்றாலும் கணேசனை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. முருகனுக்கே சில கேஸ்களில் கணேசன்தான் ஜாமீன் வாங்கி தந்திருக்கிறாராம். அந்த அளவுக்கு “திக் ஃப்ரண்ட்ஸ்”!

முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோர் கடந்த 2-ந்தேதி கொள்ளையடித்து முடிந்ததுமே இன்னொரு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி அருகேயுள்ள பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ஒன்றாக இணைந்து கொள்ளையடித்துள்ளனர். பிறகு இரு கொள்ளைகளின் நகைகளுடன் பெங்களூருவிலேயே செட்டில் ஆகிவிடலாம் என்று பிளான் போட்டுள்ளனர்.

ஏனென்றால், முருகனுக்கு பெங்களூருவில் சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது. இந்த ஒரு பங்களாவே பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்கிறார்கள். எப்படியும் போலீசார் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று நம்பிதான் இந்த செட்டிலாகும் முடிவுக்கு முருகன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், முருகனின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் விசாரணை வளையத்துக்குள் உள்ளதால்தான், சுரேஷ்.. அதை தொடர்ந்து முருகன் என அடைந்தனர்.

கொள்ளை அடித்த பணத்தை கொண்டு தெலுங்கு சினிமா உலகில் ஏகப்பட்ட ஆட்டம் போட்டுள்ளார் முருகன்.. துணை நடிகைகள், நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார். கடைசியில் எய்ட்ஸ் வரவும்தான் ஆட்டம் அடங்கி உள்ளது. பல் கொட்டி போய்.. உடம்பு மெலிந்து.. தலை மொட்டை ஆகி.. ஆளே உருக்குலைந்து போயுள்ளார்.

இந்த எய்ட்ஸ் நோய்க்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில்தான் முருகன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த ஆஸ்பத்திரி மட்டுமல்ல.. வேறு எந்த இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிக்கு போனாலும் பெயரை மாற்றி சொல்லி உள்ளார். அதிலும் சிவா, ராஜா.. இந்த ரெண்டு பெயர்களைதான் தன் பெயருக்கு பதிலாக ஆஸ்பத்திரிகளில் முருகன் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!