6 மாத குழந்தை.. 21 வயது இளம் தாய்க்கு உயிரே பறிபோன பரிதாபம்!


திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட 21 வயது பெண்மணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.

பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் ஆங்காங்கே மழை செய்து சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் டெங்கு புழுக்கள் உற்பத்தியாக கொசுக்களாக மாறி மனிதர்களை கடிக்கத் தொடங்குகிறது. இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். சில காலதாமதமாக வருவதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இந்நிலையில் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சங்கீதா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து காய்ச்சல் குணமாகாததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் டெங்குக்காய்ச்சலால் 11 மாத குழந்தை உள்பட 3 பேர் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும், வீட்டில் பாத்திரங்களில் உள்ள நீரை மூடி வைக்குமாறும், வீட்டின் பின்புறங்களில் தேவையற்ற குப்பை, தேங்காய்மட்டை, டயர்கள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சுகதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!