நடுராத்திரியில் அரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. வீடு வீடாக மிரட்டல்..!


4 பேருமே அரை நிர்வாண கோலம்.. என்ன காரணம் என்றே தெரியவில்லை.. நடுராத்திரி வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது, இந்த அரை நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் திரிகிறார்கள்… இவர்களை பிடிக்க தேனி போலீசார் அதி தீவிரம் காட்டி வருகிறார்கள்!

தமிகத்தில் அதிக அளவு கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி என்ற கிராமம் உள்ளது.

3 நாளைக்கு முன்பு, அங்கு என்எஸ்எஸ் ரோட்டில், ஈபி ஆபீசில் வேலை பார்க்கும் ராஜா என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ராஜாவின் வீட்டு சுவரில் ஏறி குதித்து, பூட்டியிருந்த வீட்டை உடைக்க முயன்றுள்ளனர் கொள்ளையர்கள். இதை விஜயா என்பவர் பார்த்து கூச்சலிடவும், அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிவிட்டனர்.

இதன்பிறகு, அடுத்த தெருவுக்கு இந்த கொள்ளையர்கள் சென்ற, ராமய்யா என்பவரின் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டதும் அங்கிருந்தும் இந்த கும்பல் எஸ்கேப் ஆகி உள்ளது. இவர்கள் யார்என்று தெரியவில்லை.

ராஜா வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஆராய்ந்த போது, இந்த கொள்ளையர்கள் 4 பேர் என தெரியவந்துள்ளது. நான்கு பேருமே அரை நிர்வாணக் கோலத்தில் தெருவில் திரிகிறார்கள். அப்படியே வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டு, எந்த வீடு பூட்டி உள்ளதோ அந்த வீட்டின் பூட்டை உடைக்க முயல்கிறார்கள்.

இந்த சம்பவம் நடப்பதற்கு, 2 நாளைக்கு முன்புதான், தேனி பழனிச்செட்டிபட்டியிலும், கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் கொள்ளை போனது. அதுவும் இவர்கள் வேலைதானா என்று தெரியவில்லை. இந்த அரை நிர்வாண கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா என்றும் தெரியவில்லை. இவர்களை தேனி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!