திருமணம், கள்ளக்காதல், விவாகரத்து – முதல்ல ஜாதகத்தில் குரு ,சுக்கிரன் எங்க இருக்கார்னு பாருங்க..?


இன்றைய கால கட்டத்தில் ஆடம்பரமாக திருமணம் செய்கின்றனர். அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து கொள்கின்றனர். காதல், கலப்பு திருமணம், கள்ளக்காதல், விவாகரத்துக்கு காரணம் என்ன என்று ஜாதக ரீதியாக அறிந்து கொள்வோம்.

ஜாதகத்தில் 2ம் வீடு குடும்ப ஸ்தானம் 7ம் வீடு களத்திர ஸ்தானம் இந்த வீட்டிற்கு குரு, சுக்கிரன், சந்திரன். பாப கிரகங்கள் சனி, ராகு கேது, செவ்வாய். மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும், மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிடமிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. காரணம் இந்த ராசியின் வீட்டு அதிபதிகள் இவர்கள்.

சிலருக்கு திருமணம் தாமதமாகிறது. சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. சிலருக்கோ கள்ளக்காதலும் அதனால் சிக்கல்களும் ஏற்படுகிறது. பெரும் பணக்காரர்களோ… பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர்.

ஏழாம் வீடு கிரக சேர்க்கை
சுக்கிரனுடன் கிரகங்கள்

எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

குடும்பத்தில் குழப்பம்
கணவன் மனைவி பிரச்சினை


லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும்.

காதல் திருமணம்
கலப்பு திருமணம்

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம். களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம். ஏழாம் இடத்தில் கேது இருந்து, லக்னாதிபதியும், சுக்கிரனும், பலம் குறைந்து இருந்தால் கலப்புத் திருமணம் நடைபெறும்.

நரக வாழ்க்கை
மண வாழ்க்கை நரகம்

ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும்.சிறப்பான மனைவி அமையமட்டார்கள். ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது.
ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும்.

கள்ளக்காதல்
சந்திரன் சுக்கிரன் சேர்க்கை


ஏழாம் வீட்டில் சூரியன் சனி இருந்தால் தந்தையின் உறவு பாதிக்கும். ஆண்களுக்கு மட்டும். சூரியன்,சுக்கிரன் இணைந்திருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையாது. 7ஆம் வீட்டில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருந்தால் கள்ளக் காதல் ஏற்படும்.

சுக்கிரன் நிலை
ஜாதகத்தில் சுக்கிரன்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை என்று அர்த்தம். ஒருவர் மனைவியை நல்ல முறையில் பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பார்.

சுக்கிரன் சந்திரன்
தடை ஏற்படும்

சுக்கிரன் சந்திரன் 7ஆம் வீட்டில் இணைந்திருந்தால் திருமணம் நடப்பது சந்தேகம்.நடத்தால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும். சுக்கிரன் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால் பிருகு மங்கள யோகம் ஏற்படும்.பலரை காதலிப்பார்கள் திருமணத்திற்குபின் யோகம் அடைவார்கள்

ஏழாம் வீட்டில் சனி செவ்வாய்
சனி செவ்வாய் சேர்க்கை

சனி செவ்வாய் இணைந்து ஏழாம் இருந்தால் இளம் வயதில் துணைவரை இழக்கும் நிலை ஏற்படும்.
சனி ராகு இணைந்து மகரம், கும்பத்தில் இருந்தால் உடல் நலக்குறைபடும், திருமணவாழ்வு பதிக்கும், சண்டை விபரீத முடிவுகள், விவாகரத்து, பிரிவு ஏற்படும். சுபர் பார்த்தால் நல்லது ஏற்படும்.-Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!