மனைவியின் அந்தரங்க காட்சிகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கணவர் – எச்சரிக்கை தகவல்..!


படுக்கை அறையில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யில் பதிவான பெண்ணின் அந்தரங்க காட்சிகளை வெளிநாட்டில் இருக்கும் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தார்.

அந்த படங்களில் மனைவியின் அந்தரங்க காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன.

மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன வாலிபர் இதுபற்றி மனைவியிடம் கேட்டார். அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், படுக்கை அறை காட்சிகளை யாரோ ரகசியமாக படம் எடுத்திருக்கலாம் என்றும் கூறினார்.

இதுபற்றி அந்த வாலிபர், வெளிநாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். எப்படியாவது மனைவியின் ஆபாச படங்களை வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும், அதனை ரகசியமாக படம் பிடித்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறி இருந்தார்.

கேரள சைபர் கிரைம் போலீசார் இச்சம்பவம் பற்றி தீவிரமாக விசாரித்தனர். அந்த பெண்ணின் படங்கள் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆராய்ந்தனர். இதில், படங்கள் அனைத்தும் வாலிபரின் வீட்டில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்தது.

சைபர் கிரைம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் இருந்து தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட்டிங் செய்வேன் என்று அந்த பெண் கூறினார்.

சைபர் கிரைம் வல்லுனர்கள் ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்து பார்த்தனர். அதில் கேமிரா ஆன்லைனில் இருந்தது தெரிந்தது. அந்த பெண் இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கேமிராவை ஆப் செய்யவில்லை. அது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து உள்ளது. இதை அறியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கேமிராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் கணவரின் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் டவுண்லோடு ஆகி உள்ளது. இந்த காட்சிகளைதான் கணவர் பார்த்து விட்டு அலறி உள்ளார்.

சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினர்.

21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து விட்டது. விரல் நுனியில் உலகம் வந்து விட்டது. தொழில்நுட்பத்தின் நுணுக்கம் தெரியாவிட்டால் இத்தகைய தவறு நடக்கத்தான் செய்யும். வங்கிகளிலும் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாக நடக்கிறது. டிஜிட்டல் சேவையை சரியாக தெரிந்து கொள்ளாவிட்டால் பண இழப்பு ஏற்படும். இதற்கு நாம்தான் நமது தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!