கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்… சூட்கேசில் ஆணுறைகள்.. ஆபாச படங்கள்..!


மனைவியை கத்தியால் கணவன் குத்திய சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை ரோட்டில் துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொன்ற நபரின் சூட்கேசில் ஏராளமான ஆணுறைகளும், ஆபாச படங்களும் கிடைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.

தர்ஷிகாவின் குடும்பம் ரொம்பவும் ஏழ்மையானது. அதனால் கனடாவில் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்தார். இதில்தான் தம்பதிக்குள் சண்டையும் தகராறும் ஏற்பட்டது. இவர்களை குடும்பத்தினராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

அதனால் விஷயம் கோர்ட் வரை வந்துவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதியும் தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்ததுடன், கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதை அங்கிருந்த பொதுமக்களே நேரில் பார்த்துள்ளனர்.

மனைவியை கொன்றுவிட்டு, ஸ்டேஷனில் தனபாலசிங்கம் சரணடைந்தார். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது சம்பந்தமான விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனபாலசிங்கம் வைத்திருந்த சூட்கேசுக்குள் ஏராளமான ஆணுறைகள், ஆபாசபடங்கள் இருந்திருக்கின்றன. இதை பார்த்து பதறியுள்ளார் மனைவி. எதற்காக இவ்வளவு ஆணுறைகளை கணவன் தனக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளார். அதனால் நேரிடையாகவே இதை பற்றி கேட்டபோதுதான் அளவுக்கு அதிகமான தகராறு இவர்களுக்குள் வெடித்திருக்கிறது.

இந்த தகராறுக்கு பிறகு இருவருமே நெருக்கமாகவும் இல்லை என்கிறார்கள். மனைவிக்குள் பெட்ரூமில் படுத்தால், தனபாலசிங்கம் ஹாலில் உள்ள சோபாவில் தூங்குவாராம். இப்படி பிரிந்திருந்தாலும், சண்டை மட்டும் குறையவே இல்லை. அப்படி ஒருநாள் நாள் காரில் போகும்போதும், சண்டை தகராறு வந்துள்ளது. அப்போது, தனபாலசிங்கம் ஆத்திரத்தில் மனைவியின் கையை முறுக்கிவிட்டுள்ளார்.

மேலும் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது தலைகாணியை வைத்து முகத்தை அமுக்கி கொலை செய்ய முயற்சியும் ஏற்கனவே செய்திருக்கிறார். இதில் எல்லாம் மனைவியின் உயிர் போகவில்லை என்பதால்தான், கத்தியை எடுத்து துரத்தி துரத்தி வந்து கொன்றுள்ளார். இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் நீதிமன்ற வழக்கு, விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!