அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி கல்லூரி மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போட்ட முழக்கத்தால் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற சக போட்டியாளரான ஓவியா மீது அபாண்டமான பொய்களை கூறி மக்களின் வெறுப்புக்கு ஆளானார் ஜூலி. ஜூலியின் பொய்களாலும் பிக்பாஸ் வீட்டில் அவர் போட்ட நாடகத்தாலும் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து படத்தில் நடித்து வரும் ஜூலி அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளிட்டுள்ளார் ஜூலி. அதில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தாளியாக பங்கேற்றிருக்கிறார் ஜூலி. அப்போது, பேசத் தொடங்கிய ஜூலி, எல்லோரும் எப்படி இருக்கிங்க என்று கேட்ட அவர், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறுகிறார்.

தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பொறுத்தவரை ஒன்றே ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்ற அவர், உண்மையான பிரன்ட்ஸ வச்சுக்கோங்க, பிரன்ட்ஷிப் மட்டும்தான் கடைசி வரை வரும் என்று அட்வைஸ் செய்தார்.

ஜூலி பேசும் போது, அங்கு திரண்டிருந்த கல்லூரி மாணவர்கள் ஓவியா.. ஓவியா.. என கத்தி ஜூலியை பேசவிடாமல் கத்தி கூச்சலிட்டு வெறுப்பேற்றினர். ஆனாலும் அசராத ஜூலி, தொடர்ந்து பேசிய ஜூலி கூட்டமா கத்துறது பெருசு இல்ல, ஒரு ஆளா இங்கே நின்னு பேசுறதுதான் பெரிய விஷயம் என்றார்.

அப்போதும் அவரை பேசவிடாமல் தொடர்ந்து கூச்சலிட்டனர் மாணவர்கள். அதனை கண்டுகொள்ளாத ஜூலி ஒருத்தரை விமர்சிப்பது பெரிய விஷயம் அல்ல, ஒருத்தரை போல் வாழ்ந்து காட்டுவதுதான் பெரிய விஷயம் என்றார்.

நீ என்னைப்பார்த்து கத்துறீங்க, நான் வந்து உங்களுக்கு சோறு போடப்போறேனா இல்லை நீங்கள் எனக்கு சோறு போடப் போறீங்களா? உழைச்சாதான் உனக்கு சோறு, இல்லாட்டி யாரும் உனக்கு சோறு போடப்போறது இல்ல என்று கூறினார்.

யார் என்ன சொன்னாலும் அப்டி தட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன். வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட ஒரே பாடம், தப்பு செய்யலாம் திருந்தலாம், ஆனா விழுந்து கிடக்ககூடாது, எழுந்து நிற்கனும் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கனும் என்று கூறினார் ஜூலி.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!