என்ன ஆட்டம் போடுறாங்க பாருங்க… ஈரான் நாட்டு இளைஞர்களின் மாம்பழமாம் மாம்பழம் பாடல்!


ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியில் ஈடுபடும் நபர்களுக்கு தினந்தோறும் ,அந்த உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் விஜய்யின் பாடல் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .

ஈரான் நாட்டில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் warm up செய்வதற்காக ஒரு பாடல் ஒளிபரப்பப்படுகிறது . இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கு ஒளிபரப்பப்படும் பாடல் நடிகர் விஜய்யின் போக்கிரி படத்தில் இடம்பெற்றிருக்கும் மாம்பழமாம் மாம்பழம் பாடல் தான் .

நடிகர் விஜய்யின் இந்த பாடலுக்கு அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள நபர்கள் அனைவரும் நடனமாடி warm up செய்வதுபோல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்யின் போக்கிரி பட பாடல் தமிழ்நாடு , இந்தியா மட்டுமல்லாமல் ஈரான் நாட்டு வரை பிரபலமாக இருப்பது நடிகர் விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!