வயசுக்கு வந்த பொண்ண வச்சுக்கிட்டு பார்க்க முடியல.. பிக்பாஸை விளாசிய பிரபலம்!


பிக்பாஸ் நிகழ்ச்சியை வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பார்க்க முடியவில்லை என பிரபல பாடகர் அந்தோணி தாசன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை கடந்த இரண்டு சீசன்களை போலவே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு இருக்கும் அளவிற்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பாடகர் அந்தோணி தாசன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, கடந்த சீசனில் பிக்பாஸ் மூலம் மருத்துவ முத்தத்தை அறிமுகப்படுத்தினார்கள். தற்போது கட்டிப்பிடிப்பதை அறிமுகம் செய்துள்ளனர். காரணமே இல்லாமல் எல்லாத்துக்கும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொள்கின்றனர்.

அடுத்து 4 சுவற்றுக்குள் நடக்கும் விஷயங்களை காட்டுவார்கள். நான் எப்போதும் பிக்பாஸ்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன். எப்போதாவது தான் பிக்பாஸ் பார்ப்பேன், அப்போதும் முகம் சுளிக்கும் வகையிலேயே பிக்பாஸ் உள்ளது. பிக்பாஸ் நம் கலாச்சாரத்திற்கு சீரழிவு.

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் என்ன மாதிரி டிரெஸ் போடுறாங்க? மேற்கத்திய மக்கள் போடுவது போன்று உடை உடுத்துகிறார்கள். வீட்டில் வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பிக்பாஸை பார்க்க முடியல. இதனை பார்த்து கிராமத்தில் உள்ளவர்களும் இதுபோன்று உடை உடுத்தினால் பெரிய பிரச்சனையாயிடும். இவ்வாறு கூறியிருக்கிறார் அந்தோணிதாசன்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்க்க பயன்படுத்தலாம். விவசாயம், கொத்தனார் பணிகள், மீனவ மக்களின் வாழ்க்கை, இசைக்கருவிகள் போன்றவை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரியப்படுத்தலாம். பிக்பாஸ் மூலமா என்ன சொல்ல வர்றீங்க என்றும் அந்தோனி தாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!