மறையாத சூரியன்.. கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.. சிலை திறப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து புறப்படும் அமைதி ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்கிறது.

இந்த ஊர்வலரத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இந்த அமைதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இன்றைய தினம் மாலை 5 மணிக்கு முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.