சனி பார்வையிலிருந்து தப்பிக்க இன்று எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும்..?


இன்று (டிசம்பர் 19 ஆம் தேதி) செவ்வாய்க்கிழமையன்று காலை 9.58 மணியளவில், இதுவரையில் விருச்சிக ராசியில் இருந்த சனிபகவான் தனுசு ராசிக்குப் பெயர்ந்து சென்றிருக்கிறார். இன்னும் இரண்டரை ஆண்டுகள் வரை அவர் தனுசு ராசியில் அமர்ந்து மற்ற ராசிகளைப் பார்ப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன சனி தொடங்குகிறது?… யாருக்கு சனி நிறைவுபெறுகிறது என்று பார்ப்போம்.

அதேபோல், இந்த வருட சனிப்பெயர்ச்சியில் எந்த ராசிக்காரர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் காணலாம்.

சனி தொடங்கும் மற்றும் நிறைவுபெறும் ராசிகள்


ரிஷப ராசி – அஷ்டம சனி ஆரம்பம்

மேஷ ராசி – அஷ்டம சனி முடிவு

மகர ராசி – ஏழரை சனி ஆரம்பம்

துலாம் ராசி – ஏழரை சனி முடிவு

தனுசு ராசி – ஜென்ம சனி ஆரம்பம்

விருச்சிகம் – ஜென்ம சனி முடிவு

மேற்கண்ட இந்த ஆறு ராசிக்காரர்களும் கருப்பு நிறத் துணியைக் கொண்டு, சனிப்பெயர்ச்சியன்று சனி பகவானுக்கு கொடுத்து, அர்ச்சனை செய்து கொள்வது நல்லது.-
tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!