தண்டவாளத்தை ஆய்வு செய்த ரெயில்வே என்ஜினீயருக்கு நடந்த பரிதாபம்..!


கல்யாண் அருகே தண்டவாளத்தை ஆய்வு செய்து கொண்டு இருந்த ரெயில்வே என்ஜினீயர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெயில் மோதியது

மத்திய ரெயில்வேயில் உதவி கோட்ட என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் விமல் ராய் (வயது40). இவர் நேற்று முன்தினம் மாலை கல்யாண் – தாக்குர்லி இடையே பட்ரிபுல் பகுதியில் ஊழியர்களுடன் தண்டவாளத்தை ஆய்வு செய்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென ஒரு ரெயில் கல்யாணில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வேகமாக வந்தது. சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்த ஊழியர்கள் ரெயில் வருவது குறித்து அதிகாரியை உஷார்படுத்தினர். எனினும் தண்டவாளத்தில் இருந்து வெளியே செல்வதற்குள் ரெயில் அவர் மீது மோதியது.

அதிகாரி பலி

இதில் படுகாயமடைந்த அவரை அங்கு இருந்த ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அதிகாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரி விபத்தில் சிக்கி பலியான அதே இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரெயில் மோதி 4 ரெயில்வே தொழிலாளர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!