கையில் கட்டாயம் காப்புக் கயிறை ஏன் கட்ட வேண்டும் தெரியுமா..?


கையில் பலரும் காப்புக் கயிறு கட்டி இருப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால், அதன் பின்னர் ஒளிந்து இருக்கும் ரகசியம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் கையில் கறுப்புக் கயிறு, காப்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள். பொதுவாக திருஷ்டி கழிக்க என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஏன் கட்டுகிறோம் என்ற கேள்வி கேட்காமல் கட்டிக் கொள்கிறோம். அதன் அறிவியல் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.


நம்மில் பலரும் மஞ்சள், கறுப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம். இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்துடன் சிலர் வெள்ளி,செம்பு, தங்கம் என தங்களின் வசதிக்கு ஏற்ப காப்பு செய்து அணிந்து கொள்வார்கள்.

பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியிலான உண்மை. இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெறலாம். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது. இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!