ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்தார் எம்எஸ் டோனி..!


இந்திய கிரிக்கெட் வீரரான எம்.எஸ்.டோனி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட்டின் அனுபவ வீரரான டோனி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசி வந்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் டோனி பங்கேற்க மாட்டார் எனவும், அவர் அடுத்த 2 மாதம் ராணுவத்தில் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விக்டர் படையுடன் தோனி நேற்று இணைந்தார். அவர் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீரில் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!