2 மாதத்தில் 12 கிலோ… திடீரென உடல் எடையை குறைத்த ஜெயராம் – ஏன் தெரியுமா?


தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஜெயராம், 2 மாதத்தில் 12 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார்.

தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் ஜெயராம். பப்லியான தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாகி வைத்திருக்கிறார்.

ஜெயராம் தற்போது அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை 12 கிலோ குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார் ஜெயராம். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக தபு நடிக்கிறார்.

தனது உடல் எடையை குறைத்தது பற்றி ஜெயராம் கூறுபோது, ‘அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி தற்போது சொல்ல முடியாது’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!