மும்பை ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் பசுமாடு செல்லும் வீடியோ


மும்பை ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் பசுமாடு ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறையில் பசுமாடு செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மும்பை பவாயில் ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் வகுப்பறைக்குள் அழையா விருந்தாளியாக பசுமாடு ஒன்று வந்து செல்லும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில் பசுமாடு ஒன்று ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் நுழைந்து கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்குள் செல்கிறது.

பேராசிரியர் நின்று பாடம் எடுக்கும் பகுதி வழியாக மாணவர்கள் முன்னால் எந்த சலனமும் இன்றி வகுப்பறையின் மறுபக்க வாசல் வழியாக வெளியே செல்கிறது.

இதை அங்கிருந்த பேராசிரியர் மற்றும் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவர்கள் திகைப்புடன் பார்த்தபடி நிற்கின்றனர். அந்த பசுமாடு ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் புகுந்தது கடந்த சனிக்கிழமை என்றும், மழையின் காரணமாக புகலிடம் தேடி அந்த பசுமாடு ஐ.ஐ.டி. வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் புகுந்த காளை மாடு ஒன்று மாணவர் ஒருவரை முட்டி தள்ளியது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!