நெல்லை மனநல மருத்துவமனையில் அட்மிட் ஆன நிர்மலா தேவி!


கல்லூரி மாணவிகளுக்கு தவறான பாதையில் வழிகாட்டியதாக கைதான பேராசிரியை நிர்மலாதேவி மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானபோது, தனக்கு சாமி வந்துவிட்டது என்று கூறி தியானம் செய்தார். பின்னர் மனநிலை சரியில்லாதவரைப் போன்று தானாக புலம்பினார்.

இந்நிலையில்,நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் மனநலசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!