சனி பகவானின் கோயிலில் கொடுக்கப்படும் எள் சாதத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாதா..?


சனீஸ்வரர் கோவிலில் வழங்கப்படும் தேங்காய், பழம், விபூதி பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் கோவிலில் விட்டு விட்டு வந்துவிட வேண்டும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது.


இதுகுறித்து திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் கூறுகையில், “திருநள்ளாறில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக கிழக்கு நோக்கி அபய முத்திரையுடன் அருளாசி வழங்குகிறார்.


ஆகவே கோவிலில் வழங்கப்படும் விபூதி, குங்குமம், தீர்த்தம், தேங்காய், பழம், லட்டு, முருக்கு, வடை, பஞ்சாமிர்தம், புஷ்பம் போன்ற பிரசாதங்களை பக்தர்கள் தாராளமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். எள் சாதத்தை காகத்துக்கு படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.-Source:maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!