தலயிடம் இதுவரை அதற்காக போய் நின்றதில்லை… முதன் முறையாக நாம் கேடகின்றோம் செய்வாரா?


அஜித் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான்.

ஏனெனில் ரஜினிக்கு பிறகு பிரமாண்ட ஓப்பனிங் அஜித் படத்திற்கு வரும், தற்போது முதன் முறையாக அஜித் தன் திரை வாழ்க்கையில் ஒரு தர்மசங்கடத்தை சந்திக்கவிருக்கின்றார்.

ஆம், நாம் முன்பே கூறியிருந்தோம், விவேகம் நஷ்டம் என்று திரையரங்க உரிமையாளர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறியதாக, தற்போது அவர் மேலும் ஒரு சில தகவலை வெளியிட்டுள்ளார். இதில் இதுநாள் வரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் பலரும் நஷ்ட ஈடு கொடுத்துள்லனர்.

ஆனால், அஜித்திடம் இதுவரை நஷ்ட ஈடு என்று போய் நின்றதில்லை, முதன் முறையாக விவேகம் படத்திற்காக தான் நஷ்ட ஈடு கேட்கின்றோம் என்று கூறியுள்ளார்.

அஜித் சத்யஜோதிக்காக அடுத்து நடிக்கவிருக்கும் விசுவாசம் படத்தில் இதை ஈடு செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. – Source: cineulagam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!