நாம் பயன்படுத்தும் கணினியில் விண்டோஸ் 10 தளத்தில் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி?


நமது கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமானது, அன்றாடம் நாம் கணிணியில் செய்யும் செயல்பாடுகளை ஹிஸ்டரியாக பதிந்து கொள்ளும்.

அந்த வகையில் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் நமது கணினியின் ஹிஸ்டரியை காண்பதும் அதை நீக்குவதும் கடினமான பணியாக இருந்தது.


தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது கணினி பயன்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்தில், கணினியின் ஹிஸ்ட்ரியை இலகுவாக அறிந்து கொள்ளவும் அதை நீக்கவும் வழிவகை செய்துள்ளது.

இனி விண்டோஸ் 10 பயன்படுத்துவோர், கணினியின் ஹிஸ்டரியை Go to Settings>Privacy>Activity History க்கு செல்வதன் மூலம் கணினியில் search history, location activity, cortana’s notebook ஆகிய தகவல்களை பார்க்கவும் நீக்கவும் முடியும். – Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!