கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்..!


சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட உள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!