அரையிறுதியில் வெறும் 11 ரன்கள் – நாக் அவுட் சுற்றில் சொதப்பி வரும் விராட் கோலி..!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி 6 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் கடந்த மூன்று உலகக்கோப்பை அரையிறுதியில் சேர்த்து 11 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.

தற்போதைய அனைத்து வகையான கிரிக்கெட்டில் போட்டியிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் கடந்த சில ஆண்டுகளில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிக வேகத்தில் ரன்களை சேகரித்து வருகிறார். ஆனால் நாக்-அவுட் சுற்றில் மட்டும் தடுமாறுகிறார்.

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பையில் கடந்த மூன்று ஆண்டுகளிலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் கோலி பேட்டில் இருந்து அதிக அளவில் ரன் ஏதும் வரவில்லை.

2011 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் பாகிதானுக்கு எதிரான ஆட்டத்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். 2015 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன்களில் வெளியேறினார். தற்போது 2019 உலகக்கோப்பை போட்டியிலும் 1 ரன்களில் வெளியேறினார். உலகக்கோப்பைகளில் இதுவரை ஆறு நாக் அவுட் சுற்றுகளில் விராட் கோலி வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

விராட் கோலியின் உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்று ரன்கள் பின்வருமாறு:-

2011 உலகக்கோப்பை கால் இறுதி 24 ரன்கள் (ஆஸ்திரேலியா)

2011 உலகக்கோப்பை அரை இறுதி 9 ரன்கள் (பாகிஸ்தான்)

2011 உலகக்கோப்பை இறுதி போட்டி 35 ரன்கள் (இலங்கை)

2015 உலகக்கோப்பை கால் இறுதி 3 ரன் (வங்காள தேசம்)

2015 உலகக்கோப்பை அரை இறுதி 1 ரன் (ஆஸ்திரேலியா)

2019 உலகக்கோப்பை அரை இறுதி 1 ரன் (நியூசிலாந்து)

-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!