குழந்தை பாக்கியத்தை தரும் தூர்வாஷ்டமி விரதம் பற்றி தெரியுமா..?


பரம்பரை சாபங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, மலட்டுத்தன்மை என குழந்தை இல்லாமைக்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். காரணங்கள் ஏராளமாக இருந்தாலும் அதை மட்டுமே நினைத்து புலம்புவதை விட அதை சரிசெய்வதற்கான பரிகாரத்தை தேடுவது தான் புத்திசாலித்தனம்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் வயிற்றில் ஒரு புழு, பூச்சி தங்கவ்லலை என்று புலம்புபவர்களைப் பார்த்திருப்போம். குழந்தை இல்லாததால் விவாகரத்துக்கு வரும் தம்பதிகளையும் பார்த்திருப்போம்.

என்ன தான் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கும் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் கடைபிடிப்பதும் மிக அவசியம்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக நம்முடைய முன்னோர்கள் தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு வந்தனர்.

அதென்ன தூர்வாஷ்டமி விரதம். அந்த விரதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா?

சந்ததி உண்டாக புரட்டாசி வளர்பிறை அஷ்டமியில் மேற்கொள்வது தூர்வாஷ்டமி விரதம்.

புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அதிகாலையில் நீராடி தந்தையும், பிள்ளையுமான சிவன், விநாயகர் இருவரையும் வழிபட்டு விரதமிருக்க வேண்டும்.


பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து பூஜை செய்ய வேண்டும்.

விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பது நல்லது.

மாலையில் கோயிலில் விநாயகர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

இந்த விரதம் சந்ததி உருவாவதற்கு துணை செய்வதோடு உங்களுடைய சந்ததியை பெருக்கவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவி புரியும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!