இந்திய கேப்டன் விராட் கோலி சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் பாபர் ஆசம். அவர் சிறப்பாக விளையாடி 101 ரன் எடுத்தார்.

24 வயதான அவர் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார். பாபர்ஆசம் 29-வது ரன்னை எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்னை தொட்டார். தனது 68-வது இன்னிங்சில் அவர் 3 ஆயிரம் ரன்னை எடுத்தார்.

இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார். கோலி 75 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்னை எடுத்து 2-வது இடத்தில் இருந்தார்.

ஹசிம் அம்லா 57 இன்னிங்சில் 3 ஆயிரம் ரன்னை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பாபர் ஆசம் உள்ளார்.

ஏற்கனவே 1000 ரன் மற்றும் 2 ஆயிரம் ரன்னில் கோலியின் சாதனையை அவர் முறியடித்து இருந்தார்.

24 வயதான பாபர்ஆசம் 68 இன்னிங்சில் 3072 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.96 ஆகும். அதிகபட்சமாக 125 ரன் குவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 3 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்த ‘டாப் 6’ பேட்ஸ்மேன்கள் வருமாறு:-

1. ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)- 57 இன்னிங்ஸ்

2. பாபர்ஆசம் (பாகிஸ் தான்)- 68 இன்னிங்ஸ்.

3. விராட்கோலி (இந்தியா)- 75 இன்னிங்ஸ்.

4. கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ்)- 72 இன்னிங்ஸ்.

5. கேரிகிர்ஸ்டன் (தென் ஆப்பிரிக்கா)- 72 இன்னிங்ஸ்.

6. தவான் (இந்தியா)- 72 இன்னிங்ஸ்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.