பிக் பாஸின் அடுத்த ஸ்டார் போட்டியாளர் இவர்தானாம்..!


பிக்பாஸ் 3 ஆரம்பித்து படு சூடாக சென்று கொண்டிருக்கிறது. சினிமா, மாடலிங், டீவி பிரபலங்கள், இலங்கை தமிழர்கள் என இந்த முறை கலந்து கட்டிய போட்டியாளர்கள் வீட்டினுள் நிறைந்துள்ளார்கள். சேரன், சரவணன், இலங்கை தமிழர்கள் என இம்முறை எதிர்பார்க்காத போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே!. அதனை உறுதிப்படுத்தும் வகையில் முதல் நாளே பிக் பாஸ் வீடு படு கொண்டாட்டத்துடன் இருந்தது. போட்டியாளர்கள் தங்களுக்குள் கலாய்த்து கொண்டும் விளையாடிக்கொண்டும் வீட்டை கலகலப்பாக்கினார்கள்.

இம்முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் 15 போட்டியாளர்கள் தான் இதுவரை உள்ளே நுழைந்துள்ளார்கள். ஞாயிறன்று தொகுப்பாளர் கமல்ஹாசன் மேலும் இரண்டு கார்டுகளை கைகளில் வைத்திருந்தார். அதில் இன்னும் இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளது. அவர்கள் எந்த நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படலாம். அதில் ஒரு போட்டியாளரைத்தான் நாம் இங்கு உங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம்.


அவர் தான் மீராமிதுன் மாடல் அழகி. வெகு சமீபத்தில் தமிழ் பெண்களுக்கான அழகிப்போட்டி நடத்த முற்பட்டு பிரச்சனைகளில் சிக்கியவர். இவர் சென்னையை சேர்ந்தவர். படிப்புக்கு பின் மாடலிங் உலகில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு 2016 பட்டங்களை வென்றவர். மேலும் எட்டு தோட்டாக்கள், சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர்.

தமிழக பெண்களுக்கென்றே மிஸ் திவா தமிழ்நாடு அழகிப்போட்டியை நடத்த முற்பட்டு பல பிரச்சனைகளில் சிக்கி செய்திகளில் பரபரப்பாக இருந்தவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. அவர் எந்த நேரமும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழையலாம். வெகு விரைவில் அவரை போட்டியாளராக பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!