எந்த கலரில் உங்க ஆளுக்கு மச்சம் அதிகமா இருக்கு.? அந்த கலருக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?


மச்சம் என்பது நம்முடைய உடலில் இருக்கும் அடையாளங்களுள் ஒன்று. அதில் சில மச்சங்கள் மிக மெல்லியதாக இருக்கும். சில மிக அடர்த்தியாக இருக்கும்.

மெல்லிய மச்சங்கள் அவ்வப்போது தோன்றி மறையக்கூடியதாக இருக்கும். சில மச்சங்கள் நிரந்தரமாக இருக்கும். அதேபோல் எல்லோருக்கும் எல்லா இடத்திலுள்ள மச்சமும் ஒரே கறுப்பு நிறத்தில் மட்டும் இருப்பதில்லை. ஆனால் பெரும்பாலானவை கறுப்பு நிறம்.

இப்படி பல்வேறு நிறங்களில் இருக்கும் மச்சங்களுக்கு நம்முடைய குணாதிசயங்களுக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக மச்ச சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

உங்களுக்கு என்னென்ன கலரில் மச்சம் இருக்கு?… நீங்க எப்படி?… தெரிஞ்சிக்கணுமா?

மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள்.

கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.


மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.

சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றோர், பழைமை விரும்பிகளாக இருப்பார்கள். வணிகத்துறையில் ஆர்வம் இருக்கும்.

குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!