இளையராஜாவை போல ராயல்டி தொகை கேட்கும் சச்சின்


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்து வருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!