சவுதியில் 13 வயது சிறுவனுக்கு மரண தண்டனை! அதிர வைக்கும் காரணம்!


சவுதி அரேபியாவில் பதிமூன்று வயதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த சிறுவன் முர்டசா குரேரிஸ். இவனுக்கு தற்போது 18 வயது ஆகிறது. ஆனால் இவன் தனது பத்தாவது வயதில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். ஷியா முஸ்லிம்களை சவுதி அரசு நடத்தும் விதம் சரியில்லை என்று கூறி பலருடன் சேர்ந்து இவனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய முர்டசா பதின்மூன்றாவது வயதில் கைது செய்யப்பட்டான். குடும்பத்துடன் பக்ரைன் சென்றுகொண்டிருந்தபோது தடுத்து நிறுத்தி அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரவாதிகள் குழுவில் சேருவதற்கு அவன் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது போலீசாரை தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தியதாகவும் அச்சிறுவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவனுக்கு பதினெட்டு வயதாகும் நிலையில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 வயது ஆகிவிட்டதால் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று சவுதி அரசு நினைக்கிறது.

ஆனால் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எப்படியாவது அவனை காப்பாற்றி விட வேண்டும் என்று வழக்குகளையும் கையில் எடுத்துள்ளன.-Source: timestamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!