அஜித்தைப் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் கூறிய அந்த வார்த்தை…!


விஸ்வாசம் படத்தில் அஜித் நடிக்கவுள்ள கெட்டப் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், அஜித்தின் புதிய தோற்றம் குறித்து பல திரைபிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்தின் புதிய லுக் குறித்து கூறும் போது, ” அஜித் சாரின் புதிய லுக்கை பார்த்தேன், விஸ்வாசமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.


அவர் என்ன ஸ்டைல் பண்ணாலும் நல்லா இருக்கும். நேரில் அவரை பார்த்தபோது பிரமிச்சு போனேன்” என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “வேலைக்காரன்” திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. – Source: thecineflix

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!