ஜெயிச்சும் மண்ணாப் போன திமுக.. ஸ்டாலின் ஒரு ராசியில்லா ராஜா!


ஸ்டாலின் மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதைத்தான் கருணாநிதியின் சமாதியில் எழுதியிருந்தார்கள். மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் கை காட்டுபவர்களே ஆட்சி என்று பூக்களால் பொறித்திருந்தார்கள்.

ஆனால், இது வெற்றியா… தோல்வியா என்று தீர்மானிக்க முடியாதபடி நாடாளுமன்றத்தில் வெற்றியும், சட்டமன்றத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை சௌந்தர்ராஜன், சொன்னது இதுவாகத்தான் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக அள்ளினாலும் தி.மு.க.வுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஸ்டாலின் காட்டிய மேஜிக் ஏனோ, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் எடுபடவில்லை.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை ஒதுக்கித்தள்ள முடியாத காரணத்தால், அ.தி.மு.க.வுக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. மத்தியில் பா.ஜ.க. வந்துவிட்டதால், இனிமேல் அத்தனை எளிதாக எடப்பாடி ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது.

நாடாளுமன்றத்திற்கு போய் ஸ்டாலின் ஆட்களால் எதுவுமே செய்துவிட முடியாது. ஏனென்றால் அத்தனை உறுதியாக மோடி அமர்ந்திருக்கிறார். அது காவிரி பிரச்னையாக இருக்கட்டும், ஹைட்ரோ கார்பன் விவகாரமாக இருக்கட்டும், தி.மு.க.வின் வெற்றுக் கூச்சலுக்கு மதிப்பே இருக்காது. ஆக, மீண்டும் ஐந்து வருடங்களை தமிழர்கள் வீணாக்கியிருக்கிறார்கள்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!