14.12.2017 இன்றைய ராசிபலன்


மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்து விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பள்ளிப் பருவ உறவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!