த்ரில்லான போட்டியில் கொல்கத்தாவை தெறிக்க விட்ட பெங்களூரு அணி..!


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட் செய்ய பணித்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும் 9 ஓவர்களுக்கு பிறகு பெங்களூரு அணி விஸ்வரூபம் எடுத்தது. மொயீன் அலி அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். கேப்டன் விராட் கோஹ்லி எதிரணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார். கோஹ்லி 58 பந்துகளில் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

நிதிஷ் ராணா மற்றும் ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி அந்த அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.ரஸ்ஸல் எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். சிறப்பாக விளையாடிய ரஸ்ஸல் 25 பந்துகளில் 65 ரன்களை அடித்தார். ராணா அவுட் ஆகாமல் 85 ரன்களை சேர்த்தார்.எனினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 203 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!