பொள்ளாச்சியை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேறிய கொடூரம் – பெண் தூக்கிட்டு தற்கொலை.!


திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ஒருவர், இருதினத்திற்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நடந்தே இன்னும் துன்பம் அகலாத நிலையில் தற்பொழுது இந்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் தற்கொலைக்குக் காரணம் அவரின் பேஸ்புக் நண்பர்கள் என்னும் அதிர்ச்சி தகவலை தற்பொழுது அப்பெண்ணின் கணவர் அயூப்கான் வெளியிட்டுள்ளார்.

பொழுதுபோக்கிற்காக சமூக வலைத்தளத்தில் அக்கௌன்ட் ஓபன் செய்து, ஓவர் ஆக்ட்டிவ் ஆகிய இருந்திருக்கிறார் அயூப் கான்னின் மனைவி. சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தி வந்துள்ள அப்பெண்ணிற்குப் பல சினேகிதர்கள் சமூக வலைத்தளம் மூலம் கிடைத்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவருடன் பழகி வந்துள்ளார். நட்பின் நம்பிக்கையில் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படங்களும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை வைத்து அவர் மனைவியை மிரட்டி பணம் வாங்கியதாகவும் ஆயுப் கான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தனது மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் தொல்லைகளைக் கொடுத்ததாகவும் ஆயுப் கான் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பாலியல் தொல்லைகள் மற்றும் மிரட்டலுக்கு ஆளான பெண் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இதன் அடிப்படையில் அந்த மூவரின் விபரங்களையும் சேகரித்து காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது.

கூடுதலாக ஆயுப் கானின் மனைவி பயன்படுத்திய மொபைல் போனில் இருந்து விபரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறை களமிறங்கியுள்ளது. பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்பொழுது வெளியாகி உள்ள இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.-Source: gizbot

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!