வீட்டில் ஒரே சண்டையா..? குழந்தையில்லையா? – ஜாதகத்தில் குரு எங்க இருக்கார் என முதலில் பாருங்க!


கல்யாணமான நாளில் இருந்தே சண்டை சச்சரவா இருக்கே? இத்தனை வருஷம் ஆச்சு ஒரு குழந்தை இல்லையே என்று ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போவார்கள். அவர்களுக்கு குரு எங்கே நின்றிக்கிறார் என்று பார்க்க வேண்டும்.

தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் ‘குரு நின்ற இடம் பாழ்’ என்கின்றனர் ஜோதிடர்கள். குரு பகவான் பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள்.

எத்தனை பணமிருந்தும் புகழிருந்தும் என்ன வீட்ல நிம்மதியில்லையே என்று புலம்புவார்கள். கணவன் மனைவி இடையே சந்தோசமில்லை… அம்மா, அப்பா என்று கூப்பிட மழலை செல்வமில்லை என்று புலம்புவார்கள். இதற்கெல்லாம் உங்கள் ஜாதகத்தில் குருபகவான் எங்கே எப்படியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.


ஏழாம்பாவகம்
மணவாழ்க்கை கசக்கும்

சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஏழாம் இடத்தில் தனித்த குரு இருந்தால்,தனித்த சுக்கிரன் இருந்தால் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்வை கசப்பாக்கி விடுகிறார். குரு எங்கே எப்படியிருந்தால் என்ன நடக்கும் பார்க்கலாம்.

குழப்பவாதி
லக்னத்தில் குரு

குருபகவான் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள் உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார். லக்னத்தில் குரு இருப்பது மற்றொரு வகையில் மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த இடங்களின் பலம் விருத்தியாகும்.


இரண்டில் குரு
பேச்சில் தடுமாற்றம்

லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும்.

புத்திர ஸ்தானம்
குழந்தை பாக்கியத்தில் தடை

ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் குழந்தை பிறப்பதில் தடை ஏற்படும். பரிகாரங்கள் செய்தால் காலம் கடந்து குழந்தைகள் பிறப்பது, உடற்குறையுள்ள புத்திரர்கள் பிறப்பார்கள். புத்திரர்களால் நிம்மதியற்ற தன்மை, புத்திரசோகம் ஏற்படும்.

குடும்பத்தில் குழப்பம்
கணவன் மனைவி பிரச்சினை


லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும்.

கெட்டதிலும் நல்லது
அந்தஸ்து அதிகரிக்கும்

அதே நேரத்தில் ஏழாம் இடத்தில் இருந்து குரு லக்னத்தை பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம், புகழ், அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு உண்டாகும். என்னதான் அந்தஸ்து கவுரவம், புகழ் கிடைத்தாலும் குடும்பத்தில் நிம்மதியில்லை என்றால் எத்தனையிருந்தாலும் வீண்தானே.


தொழிலில் சங்கடம்
உத்யோகத்தில் நிலையில்லை

லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில், உத்யோக ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால் வியாபாரம், தொழிலில் ஏதாவது சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும், அடிக்கடி தொழிலை மாற்றுவார். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பிடிப்பு இருக்காது. தொழில் செய்யும் இடங்களில் வழக்குகள் மற்ற குறுக்கீடுகள் இருக்கும்.

வீடு மனை யோகம்
வம்பு வழக்கு

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், வழக்குகள் என ஏற்படலாம். ஆனால், பத்தாம் இடத்தில் இருந்து குரு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம், மண், மனை, வீடு, வாகன யோகம் உண்டாகும்.-Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!