அப்பாவைக் காணவில்லையென பொலீஸில் முறைப்பாடு செய்த மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!


மழையில் நனைந்து குளிர் நடுக்கத்துடன் இருந்த 70 வயதான காதலனை கட்டாயப்படுத்தி காதலி பாலியல் உறவில் ஈடுபட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்காதலி உட்பட மூவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பொலிஸார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ன்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 70).

இவர், தனது மகள், மருமகன் ஆகியோருடன் சின்னமடத்துப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு மகனும், மருமகளும் சென்றுள்ளனர்.

அங்கிருந்து திரும்பி வந்துபார்த்த போது, சாமிநாதன் வீட்டில் இல்லை. சாமிநாதனின் இரு சக்கர வாகனம் மட்டும் இருந்தது. இது குறித்து பெருந்துறை பகுதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பேரில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். பெருந்துறை பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் அணிந்திருந்த நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளன.

சாமிநாதன் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு காட்டுப்பகுதிக்கு ஏன் சென்றார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியிடம் இரண்டு பெண்கள் உட்பட மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளனர்.

அவர்கள் பெருந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்போது பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விஜயமங்கலம் விண்டெக்ஸ் நகரில் வசித்து வருபவர் பாப்பாத்தி (வயது57).

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கணவனை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். சாமிநாதனுக்கும் பாப்பாத்திக்கும் பல வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி மதியம் பாப்பாத்தி வீட்டுக்கு சாமிநாதன் சென்றுள்ளார். அப்போது அவர் மழையில் நனைந்து குளிர் நடுக்கத்துடன் காணப்பட்டுள்ளார்.

அந்த நிலையில் பாப்பாத்தி அவரை பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். இதற்கு சாமிநாதன் மறுத்துள்ளார். ஆனாலும் அவருடன் பாப்பாத்தி வலுக்கட்டாயமாக பலமுறை உறவில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இறந்ததை உறுதி செய்த பாப்பாத்தி, அவரின் சடலத்தை சமையலறையில் பதுக்கியுள்ளார்.

ஒரு நாள் கழிந்ததால் துர்நாற்றம் வீசும் என்ற பயத்தில் சென்னிமலை அருகே வாய்பாடியில் வசிக்கும் தன் மகன் கிருஷ்ணனுக்கும் சென்னிமலை ஓட்டப்பாறை பகுதியில் குடியிருக்கும் உறவினரான ஈஸ்வரியிடமும் கூறி அவர்களை அழைத்துள்ளார்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு அவர்கள் இருவரும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் பாப்பாத்தியுடன் சேர்ந்து சமையலறையில் மறைத்து வைத்திருந்த சாமிநாதனின் சடலத்தை கிருஷ்ணனுக்கு சொந்தமான காரில் ஏற்றிச் சென்று ஓடைக்காட்டூர் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் போட்டுள்ளனர்.

பாப்பாத்தி வீட்டில் நிறுத்தியிருந்த சாமிநாதனின் இரு சக்கர வாகனத்தை பெருந்துறை பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு வந்து விட்டதாக கூறியுள்ளனர். பொலிஸார் விசாரிப்பதை அறிந்த மூவரும் பொலிஸில் சரணடைந்துள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாப்பாத்தி, அவரது மகன் கிருஷ்ணன், சம்பந்தி ஈஸ்வரி ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களை பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். – Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!