காதல் மனைவிக்காக தமிழக தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்…!


தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர், இரண்டு மாதங்களாக படுத்தபடுக்கையாக இருக்கும் தனது மனைவிக்கு ரிமோட் கண்ட்ரோல் பெட்டை செய்து கொடுத்த நெகிழ்வான சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதான சரவண முத்து என்ற அந்த தொழிலாளி, தனது மனைவி சவுகரியமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த படுக்கைக்கு உருவாக்கியுள்ளார். அவரது இந்த கண்டுபிடிப்பிற்காக தேசிய புதுமைபடைப்பு நிறுவனம் இரண்டாவது பரிசு வழங்கி கவுரவித்துள்ளது.

முத்துவின் மனைவி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுத்தபடுக்கையானார். தனது மனைவியின் கஷ்டத்தை பார்த்த பிறகு, அவருக்கு உதவ ஏதாவது செய்ய முடிவெடுத்த முத்து, தொலைதூர கட்டுப்பாட்டின் படி இயங்கும் கழிப்பறையுடன் கூடிய படுக்கை (ரிமோட் கண்ட்ரோல் டாய்லெட் பெட்) என்ற யோசனைக்கு வந்தார்.

“படுக்கையிலிருக்கும் நோயாளிகளின் துயரங்களையும், அவர்கள் எல்லாவற்றிக்கும் மற்றவர்களை எப்படி சார்ந்துள்ளனர் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனிருந்து கவனிப்பவர்கள் கூட அவர்களை கவனிக்கும் போது ஒருவித வெறுப்பின் அடையாளங்களை காட்டுகிறார்கள்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் தனியுரிமையும் பாதிக்கப்படுகின்றது.நோயாளிகளின் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் தக்கவைக்கவே நான் இந்த படுக்கையை வடிவமைக்க முடிவு செய்தேன்”என்கிறார் முத்து.


இவர் வடிவமைத்துள்ள இந்த படுக்கையில் ஒரு ஃப்ளஷ் டேங்க், மூடியுடன் கூடிய குழாய், செப்டிக் தொட்டிக்கு ஒரு இணைப்பு மற்றும் நடுவில் ஒரு இடைவெளி ஆகியவை உள்ளன.அதன் ரிமோட் கண்ட்ரோல் மூன்று பொத்தான்களைக் கொண்டுள்ளது. ஒரு பொத்தான் படுக்கையின் அடித்தளத்தை திறக்கவும், இரண்டாவது குழாயின் மூடியை திறக்கவும், மூன்றாவது பொத்தான் கழிப்பறையை ஃப்ளஷ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு முத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார். கலாம் அவரை வழிநடத்தியதுடன், தேசிய புதுமைகண்டுபிடிப்பு அறக்கட்டளையின் விருதுக்கு விண்ணப்பிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து, விருது மற்றும் ரூ. 2 லட்சம் பரிசு தொகையுடன், முதல் படுக்கையின் தயாரிப்பு செலவான 35,000 ரூபாயையும் திரும்ப பெற்றுள்ளார் முத்து. இந்தியா முழுவதும் இருந்து 350 க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ள முத்து, இதுவரை ஒரு படுக்கையை டெலிவரியும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: gizbot

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!