இவங்களுக்கு உதவி செய்றது சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது மாதிரி.. இந்த ராசிக்காரரிடம் உஷாரா இருங்க!


ஒருவருக்கு உதவி செய்யும்போது அதனை பெற்றவர்கள் கூறும் நன்றியோ, பாராட்டோ அல்லது சிறிய புன்னகை கூட அதனை செய்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதன்பின் தொடர்ந்து அவர்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். இது மனித இயல்பின் அடிப்படை பண்பாகும். ஆனால் சிலரோ நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை பெற்றுக்கொள்வார்களே தவிர அதற்கான பாராட்டையும், மரியாதையையும் உங்களுக்கு தரமாட்டார்கள். இந்த குணம் அவர்களின் பிறந்த ராசியின் காரணமாக கூட அவர்களுக்கு ஏற்படலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படிப்பட்ட குணத்துடன் இருப்பார்கள் என்பதை பார்க்கலாம்.


விருச்சிகம்
விருச்சிக ராசிக்கார்கள் எப்பொழுதும் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். விருச்சிக ராசியினர் எப்பொழுதும் மற்றவர்கள் தங்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். மற்றவர்களை எப்பொழுதும் தாழ்வாகவும், அவர்கள் தங்களுக்கு சேவை செய்யவே பிறந்தவர்கள் என்றும், தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றவே மற்றவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். விருச்சிக ராசிக்காக பல்வேறு துயரங்களை சந்தித்து அவர்களை பாதுகாத்தால் நீங்கள் அதற்காக பாராட்டப்படுவீர்கள் என்று நினைத்தால் நீங்கள்தான் ஏமாளி. அவர்கள் உங்களின் உதவிகளை மதிக்கவே மாட்டார்கள். உங்களின் அனைத்து கடின முயற்சியும் வீணாகும் என்பது உறுதி.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் பரிகளுக்காகவோ அல்லது கிடைக்கும் உணவுகளுக்காகவோ மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஆனால் ஒருவர் தனக்காக அதிக நேரம் செலவழிக்கும் போது அதை உணரவோ அல்லது பாராட்டவோ இவர்கள் முன்வரமாட்டார்கள் அவர்களை எளிதில் அலட்சியப்படுத்தி விடுவார்கள். இவர்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுங்கள் உங்களை பாராட்டுவார்கள், நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களின் ஒரு மணி நேரத்தை இவர்களுக்காக செலவழித்தால் அதனை இவர்கள் பெரிய விஷயமாக கருதவே மாட்டார்கள்.


கன்னி

கன்னி ராசிக்காரர்கள் உதவுபவர்களை மட்டுமின்றி எதையுமே பாராட்டமாட்டார்கள், ஏனெனில் அவர்களின் சுபாவமே அதுதான். இவர்களுக்கு நன்றியுணர்வு என்பது மிகவும் குறைவுதான், ஏனெனில் இவர்கள் அனைவரும் தனக்கு கடமைப்பட்டவர்கள் என்ற மனோபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்துமே இவர்கள் எதிர்பார்த்ததுதான், அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அவை இவர்களுக்கு குறைந்தளவு நன்றியுணர்வை கூட வழங்காது.


கும்பம்

அவர்களின் சாதுர்யம் மற்றும் தந்திரங்களின் மூலம் கும்ப ராசிக்கார்கள் மற்றவர்களை அவர்கள் மீது தான் அக்கறை கொண்டுள்ளதாக நினைக்க வைத்துவிடுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களுக்காக நீங்கள் எவ்வளவு பெரிய உதவியை செய்தாலும் அதற்கு பதிலாக உங்களுக்கு அவர்களிடம் இருந்து கிடைக்கபோவது மிக மெல்லிய புன்னகை மட்டுமே. அவர்கள் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று முட்டாள்த்தனமாக நினைக்காதீர்கள். அவர்கள் உங்களை பெரும்பாலும் தொல்லையாகவே கருதுவார்கள்.


துலாம்

இவர்கள் உங்களை மிகவும் எளிதாக ஏமாற்றக்கூடியவர்கள், அதுவே அவர்களின் திட்டமாக கூட இருக்கலாம். உங்களின் இரக்கத்தை பயன்படுத்தி உங்கள் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொண்டு உங்களிடம் இருக்கும் அனைத்தும் தீர்ந்த பிறகு சிறிய நன்றி கூட கூறாமல் உங்களை அப்படியே விட்டுவிட்டு செல்லக்கூடியவர்கள் இவர்கள். பல வழிகளில் நன்றியுணர்ச்சி இல்லாத ராசி என்று இதனை சொல்லலாம். தன்னுடன் இல்லாத மற்றவர்கள் பற்றி எப்போதும் இவர்களுக்குள் ஒரு கேவலமான எண்ணம் இருக்கும்.


ரிஷபம்

மிகப்பெரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைத்தாலும் அவர்கள் அதனை தாங்கள் எதிர்பார்த்த ஒன்றாகவே கருதுவார்கள். இவர்களுக்கு நன்றி கூறுவது என்பது எப்படி என்று கூட தெரியாது என்று சொல்லலாம், நன்றியுணர்வை காட்டுவதன் மூலம் தான் கொண்டிருப்பதை இழக்க நேரிடும் என்பது இவர்களின் முட்டாள்தனமான கருத்தாகும். அதனால்தான் இவர்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் மேலே மேலே சென்று கொண்டேயிருக்கும். அனைத்தையும் அடைந்தாலும் இவர்களின் அடுத்த கேள்வி மேலும் என்ன என்பதாகத்தான் இருக்கும்.-Source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!