பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்..!


இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், அருண் ஜெட்லியை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபகாலமாக அவர் பாஜக சார்பாக டெல்லியில் உள்ள மக்களவை தொகுதி ஒன்றில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், பாஜகவில் இன்று முறைப்படி இணைந்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்துள்ளார்.

37-வயதான கவுதம் கம்பீர், பிரதமர் மோடியின் செயல்பாடு, தொலைநோக்கு பார்வை ஆகியவை மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். புதுடெல்லி தொகுதியில் கவுதம் கம்பீர் போட்டியிடக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

பாராளுமன்ற தேர்தலில் கவுதம் கம்பீர் போட்டியிடுவாரா? என்பது பற்றிய எந்த தகவலையும் தெரிவிக்க அருண் ஜெட்லி மறுத்துவிட்டார். கட்சியின் தேர்தல் குழுவே இந்த முடிவை எடுக்கும் என அருண் ஜெட்லி மழுப்பலாக பதிலளித்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!