மக்களே உஷார்! அடுத்த ஆறு மாதத்திற்கு சென்னையில் நடக்கப் போவது என்ன தெரியுமா?


தற்போது சமூக வலைதளங்களில் பரவும் பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய முறையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய மண்டலமாக சென்னையில் மண்டல வானிலை மையம் செயல்படுகிறது.

மழை, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், பொதுமக்களுக்கு எளிதாக தகவல்களை தெரிவிக்கும் வகையில், www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தை மாற்றியுள்ளது.


இதுவரை, உள் பக்கங்களில் பதிவேற்றப்பட்ட வானிலை அறிவிப்புகள், மழை நிலவரம், மாவட்ட வானிலை நிலவரம், மழை அளவு போன்ற தகவல்கள், தற்போது, முகப்பு பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றது.

இந்த ஆய்வகம் மூலமாக சென்னையிலிருந்து 500 கி.மீ சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்க முடியும். ஆனால் கடந்த முறை ஏற்பட்ட’வர்தா’ புயலின் போது ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன.


இதனை இந்திய வானிலை மையம் சில மாதங்களில் சரி செய்த போதிலும் ‘லைவ்’ வானிலை தகவல் அளிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, ‘லைவ்’ வானிலை தகவல் பக்கம் செயல்படாமல் இருந்தது.

தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், ‘லைவ்’ வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சமூக வலைதளங்களில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுகின்றன. அதனால் மக்கள் பீதி அடைகின்றனர். இதைத் தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு சரியான வானிலை நிலவரம் சென்று சேரவும், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை, வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்த உடனே, அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற்றுள்ளன. – Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!