தஷ்வந்தின் திடுக்கிடும் வாக்குமூலம்! தந்தைக்குப் பின் யாரைக் கொலை செய்யவிருந்தார் தெரியுமா?


சிறுமி ஹாசினி, தாய் மட்டுமல்ல தந்தையையும் கொல்ல திட்டமிட்டிருந்தாராம் தஷ்வந்த். குதிரை பந்தயம், ஜாலி வாழ்க்கை என்று இருந்தவரிடம் வேலைக்கு போ என்று பெற்றோர் சொன்னதே இதற்குக் காரணமாம்.

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களைச் சொல்லியுள்ளார் தஷ்வந்த். 22 வயது இளைஞர் தஷ்வந்த் காவல்துறையிடம் சிக்கவில்லை என்றால் இன்னும் எத்தனை கொலை செய்திருப்பார் என்பதை நேற்று ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் காட்டியது.

நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு, தஷ்வந்தை போலீசார் வெளியே அழைத்துவந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தஷ்வந்த்தின் உறவினர் ஒருவர் தஷ்வந்த்தின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

தஷ்வந்தின் கண்ணில் வெளிப்பட்ட கோபம், வன்மமத்தைக்கண்ட காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தஷ்வந்தின் முகம் முழுக்க கோபம் கொப்பளித்தது.


இதுமட்டுமில்லை, காவல்துறையிடம் தஷ்வந்த் அளித்த வாக்குமூலத்தில் இன்னும் சிலரை கொலை செய்ய கட்டம் கட்டியிருந்ததாகவும் அதற்குள் காவல்துறையிடம் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார். யார் அவர்கள்? ஏன் தஷ்வந்த் அவர்களை கொலை செய்யவேண்டும்?

தஷ்வந்தின் முதல் டார்கெட் அவரது தந்தை சேகர் முதல் நபர் என்கிறது காவல்துறை. மெக்கானிக்கல் எஞ்சினீரிங் முடித்துவிட்டு, வேலைக்குப்போ என்று பெற்றோர் சொன்னபோதே முடியாது என்று தஷ்வந்த் அடம் பிடித்துள்ளார்.

பின்னர், 7வயது ஹாசினியை கொலை செய்தபோது தன் மகன் என்பதால், ஆதரவு தெரிவித்தனர் பெற்றோர். சொத்துக்களைவிற்று தஷ்வந்தை ஜாமினில் வெளிக்கொண்டுவந்தனர்.

வீட்டுக்கு வந்த தஷ்வந்த்திடம் ஹாசினியை ஏண்டா கொலை செய்தாய்?அந்த பாவம் உண்ணை சும்மா விடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர்.


இதனால், பெற்றோரிடம் இருந்து தப்ப வேண்டும் என்று திட்டமிட்டார் தஷ்வந்த். பணம், நகைக்காக ஏதோ திடீரென தாய் சரளாவைக்கொலை செய்யவில்லை.

நன்றாக திட்டமிட்டே குற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்கிறார் விசாரணை அதிகாரி. அதற்காக இரும்பு கம்பிகளை தயார் செய்து, சத்தம் வெளியில் கேற்கக்கூடாது என்பதற்காக வாயில் துணி வைத்து அடைக்க திட்டமிட்டார் தஷ்வந்த்.

ஆனால், ஒரே அடியில் சரளா ரத்த வெள்ளத்தில் மயங்க, துணிக்கு வேலையில்லாமல் போனது. தாயைக் கொன்றுவிட்டு, தந்தை சேகரின் வருகைக்காக தஷ்வந்த் காத்திருந்தார்.

ஆனால், எப்போதும் வரும் நேரத்தில் வேலை முடித்துவிட்டு வரவில்லை. அதனால், சேகர் தப்பித்தார். அதற்குள், தனது வீட்டைவிட்டு ஓடவேண்டிய நிலை தஷ்வந்துக்கு ஏற்பட்டது.


அக்கம்பக்கத்தில் இருந்தவர்களில் ஒரு சிலர் கதவை தட்ட, உள்ளே இருந்தே பேசிய தஷ்வந்த், ஒன்னும் பிரச்னையில்லை என சமாளித்துள்ளார். ஆனால், அவர்கள் தஷ்வந்தின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை தெரிந்துகொண்ட தஷ்வந்த், என்ன செய்வது என்று தெரியாமல், சரளாவின் தங்க செயின், பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, வெளியே நின்றுகொண்டிருந்த சரளாவின் பைக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார்.

தப்பிய அவர் நேராக, தனக்கு சிறையில் அறிமுகமான நண்பர்களைச் சந்தித்தார். தாய் சரளாவின் தாலியை அடமானம் வைத்தில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அன்றிரவே பெங்களூரு சென்றுள்ளார்.

பின்னர், அடுத்தநாள் மும்பைக்குசென்று பாலியல் தொழில் மூலம் நட்பான பெண்மணியின் வீட்டில் தங்கியுள்ளார். தஷ்வந்தின் இரண்டாவது டார்கெட் யார் தெரியுமா? சிறையில் நட்பான செங்குன்றம் மணிகண்டன்.


இவர்தான் தஷ்வந்திடம் நகையை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தவர். மிக குறைந்த பணத்தைக்கொடுத்து மணிகண்டன் தம்மை ஏமாற்றிவிட்டதாக தஷ்வந்த் தனது தோழியிடம் சொல்லியுள்ளார்.

விரைவில் அவரையும் கொலை செய்யவேண்டும் என்று தஷ்வந்த் திட்டமிட்டதாக, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மணிகண்டன் இப்போதுவரை தலைமறைவாக உள்ளார்.

இப்படி தனக்கான ஒரு சொகுசு உலகத்தை ஏற்படுத்தி, அதில் வாழவேண்டும். அதற்கு தடையாக யார் இருந்தாலும் கொலை செய்யவேண்டும் என்ற மனநிலையில் தஷ்வந்த் இருக்கிறார் என்கிறது காவல்துறை.

தற்போது போலீஸ் வலையில் சிக்கியுள்ள தஷ்வந்த் என்னும் மிருகத்திற்கு சட்டம் தகுந்த தண்டனை தர வேண்டும். – Source: athirvu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!