மாறுவேடத்தில் லண்டனில் சுற்றிய நீரவ் மோடி அதிரடி கைது..!


இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெற்றனர் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் இவரது உறவினர் மெகுல் சோக்ஸி. இந்த நிலையில் அந்த கடன்களை வங்கிகள் திருப்பி கேட்ட போது அதை செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த ஆண்டு நீரவ் மோடி தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது. இந்நிலையில் அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் நேற்று நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்தது.

அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!